×

தொடரும் வன்முறையால் இலங்கையில் பதற்றம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை என தகவல்

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. இலங்கையில் இன்றும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வெடித்த மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சூழல் குறித்து இன்று மாலை எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. இதனிடையே கோத்தபய ராஜபக்சவிடம் இருந்து எந்த ஆலோசனைகளையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே எங்களின் ஒரே வலியுறுத்தலாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும் படி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post தொடரும் வன்முறையால் இலங்கையில் பதற்றம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசனை என தகவல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Godapaya Rajapakse ,COLOMBO ,GOTHABAYA RAJABAKSE ,Kotabaya Rajapakse ,Dinakaraan ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்